“எதுக்கு இப்படி முடி வெட்டுன..” கண்டித்த தாய்..! மகன் எடுத்த விபரீத முடிவு..!

446

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த கைகான் குப்பத்தை சேர்ந்தவர் மோகனா. இவருக்கு 17 வயதில் சீனிவாசன் என்ற மகன் உள்ளார். சீனிவாசன் தனியார் விடுதியில் தங்கி, குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சீனிவாசன், சலூன் கடைக்கு முடி வெட்ட சென்றிருக்கிறார். முடியை ஸ்டைலாக வெட்டியிருந்ததால், அவரது தாய் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

இதையடுத்து மோகனா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனிமையில் இருந்த சீனிவாசன், தாய் திட்டியதால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சீனிவாசன் உயிரிழப்பில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of