“பிறந்தநாள் டீச்சர் அதான்..” பீர் குடித்த பள்ளி மாணவிகள்..! டீச்சர் திட்டியதால் எடுத்த விபரீத முடிவு..!

632

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள சின்ன சோரகை கிராமத்தை சேர்ந்தவர் கவிதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி அன்று கவிதாவிற்கு பிறந்த நாள் என்பதால், தனது நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் பள்ளிக்கு வரும்போது, பையில் பீர் பாட்டில்கள் சிலவற்றை எடுத்து வந்துள்ளார்.

வகுப்பறையில் பீர் பாட்டிலும், கையுமாக கவிதா நின்றுக்கொண்டிருக்கும்போது, வகுப்பாசிரியர் அங்கு வந்துள்ளார். கவிதா கையில் பீர் பாட்டில் இருப்பதை பார்த்து அதிர்ந்த ஆசிரியர், அவரை கடுமையாக திட்டி, தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்றுள்ளார்.

தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாத அந்த மாணவி, வீட்டில் யாருக்கும் தெரியாமல் சூசைட் செய்து இறந்துள்ளார். இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெற்றோர், அந்த பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் எரித்துள்ளனர்.

இந்த விஷயம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிந்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.