நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துகள்..! தடுப்பதற்கு பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு..!

678

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் தூக்க கலக்கம் காரணமாக நடைபெறும் விபத்துகளை தடுக்க 11-ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் அறிவியல் உதவியுடன் புதிய கண்ணாடியை கண்டுபிடித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த பிரதியூஷ் சுதாகர் என்ற மாணவன் கண்டுபிடித்துள்ள கண்ணாடி, வாகனம் ஓட்டும்போது ஓட்டுநர்களை தூங்க அனுமதிக்காது.

இந்த அதிநவீன கண்ணாடியின் இடதுபக்கத்தில் Infra red Sensor வழங்கப்பட்டுள்ளது. இரண்டு LED பல்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக உருவாக்கப்படும் Infra red கதிர்வீச்சு, ஓட்டுநரின் கண் இமைகளின் மீது பட்டு பிரதிபலிக்கும்.

இதன் விளைவாக உருவாகும் அதிர்வு, ஓட்டுநரை தூங்கவிடாமல் கண் விழிக்க வைத்திருக்கும். தூக்க கலக்கத்தால் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாணவன் பிரதியூஷ் சுதாகர் கண்டுபிடித்துள்ள கண்ணாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of