பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – போர்க்களமாக மாறிய போராட்டம்

598

மேற்குவங்கத்தில் பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது..

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள சோனாப்பூர் கிராமத்தில் கழிப்பறைக்கு சென்ற 10ம் வகுப்பு பள்ளி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆதாரங்களோடு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வன்புணர்வு கொலை வழக்கை போலீசார் சரியாக விசாரிக்கவில்லை என்று கூறி, மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோப்ரா என்ற இடத்தில் திரண்ட மக்கள், சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது 3 பேருந்துகளும், போலீஸ் வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

போலீசார் போராட்டக்காரர்களை அடக்கினாலும், அருகில் உள்ள மற்றோரு சாலையில் திரண்ட மக்கள், போலீசார் அம்புகளை விட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.