பள்ளி ஆசிரியர் வெட்டி கொலை!

758

விருதுநகர் மாவட்டம் வதுவார் பட்டியை சேர்ந்த வடிவேல் முருகன் தூத்துக்குடி மாவட்டம் புதூர் சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், நத்தம்பட்டியைச் சேர்ந்த கிரேஸி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்த நிலையில் வடிவேல் முருகன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த வடிவேல் முருகனை தேடி கிரேஸியின் சகோதரர் அற்புத செல்வம் வந்துள்ளார்.

இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அற்புத செல்வம் தனது அக்காள் கணவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பொதுமக்கள் பலர் சம்பவ இடத்தில் நின்றும், கத்திக்குத்தை தடுக்க யாரும் தடுக்க முன்வரவில்லை எனவும் செல்போனில் வீடியோ எடுப்பதிலேயே குறியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், அற்புத செல்வத்தை கைது செய்தனர்.

 

Advertisement