வீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

129

ஈரோடு பவானி அருகே அரசுப்பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதி வராததால் செல்வராஜ் என்ற ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் அடைந்ததால் அவர்களுக்கு உடனடியாக பவானி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 மாணவர்களுக்கு காயம் பலமாக இருந்ததால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து தகவலறிந்து பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.