அரியானா மற்றும் தெலங்கானாவில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

200

இந்தியாவில் கொரொனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அரியானாவில் பெருந்தொற்று பாதிப்புகளை தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. பெருந்தொற்று தளர்வுகளை தொடர்ந்து, அரியானாவில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் தொடங்கி செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு, அரியானாவில் 3 முதல் 5 வகுப்பு வரை மாணவர்களுக்கு இன்று முதல் பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் பெருந்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement