தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 621 அறிவியல் ஆய்வகங்கள் திறக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

512

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி, கலைத்திறன், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.இதனை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் நலனில் எப்போதும் தமிழக அரசு கூடுதல் கண்காணிப்புடன் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறந்த கல்வியை உருவாக்கும் நோக்கில் தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 621 அட்டல் டிங்கரிங் ஆய்வகங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் திறக்கப்படும் என கூறினார்.

Advertisement