குழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,? அறிவியல் ரீதியான உண்மைகள்!

853

நவீன உலகத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம், நம்முடைய பாரம்பரியத்தை மறந்து நவீன யுகத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறோம். இதனால் நம்முடைய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் அழிந்துக்கொண்டே போகின்றன.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று குழந்தைகள் தூங்குவதற்கு செய்யப்படும் தூளி. இதுகுறித்து 10 அறிவியல் ரீதியான உண்மைகளை தற்போது அறிந்துக் கொள்ளலாம்..,

1. குழந்தைகள் தாயின் கருவரையில் 10 மாதங்கள் இருந்து விட்டு, வெளியே வருகின்றன. பின்னர் அந்த குழந்தைகள் கட்டிலிலோ, சமதளமான மெத்தைகளிலோ வைக்கும் போது அசௌகரியமாக இருக்கும். ஆனால் தூளியில் தூங்கும் போது, தாயின் கருவரையில் இருந்த உணர்வை குழந்தைக்கு அது அளிக்கும்.

2. தூளியில் குழந்தைகளை தூங்க வைக்கும் போது, அவர்களின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.

3. தூளி முன்னும் பின்னும் ஆடுவதால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

4. குழந்தை தூளியில் சிறுநீர் கழித்துவிட்டால், தூளியிலிருந்து சிறுநீர் வடிந்து, தரைக்கு வந்துவிடுவதால் குழந்தையின் உடலில் ஈரம் தங்காமல் தடுக்கப்படுகிறது. புரண்டாலும் குழந்தை கீழே விழ வாய்ப்பில்லை.

5. தூளியில் தூங்கும் குழந்தைக்கு, தாயின் கருவரையில் இருக்கும் போது கிடைத்த மன அமைதி கிடைக்கும்.

6. குழந்தையை தூளியில் படுப்பதால் காலும் தலையும் சற்று உயர்ந்தும் வயிறும் முதுகும் பள்ளமான இடத்தில் இருப்பதால் குழந்தை உண்ட உணவை வாந்தி எடுக்காமல்,  நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

7. தாயோ, தூளியை ஆட்டுபவரோ தூளியை ஆட்ட குழந்தையால் தன் நேர் கண்ணால் பார்க்க முடியும். இதனால் கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

8. தூளியில் படுக்கும் குழந்தைகளுக்கு தாயின் மார்ப்போடு ஒட்டி இருப்பது போன்ற உணர்வு இருக்கும். ஒருவித கதகதப்பான உணர்வு அவர்களுக்கு கிடைக்கும்.

9. குழந்தையின் முதுகு எலும்பு வளைவுகள், சரியாகத் தூளியில் பதிவதால் குழந்தைக்கு சௌகரியமாக இருக்கும். தூளியில் படுத்திருந்தால் நெருக்கமான ஒரு உணர்வு குழந்தைக்கு கிடைக்க, குழந்தை நன்கு தூங்கும்.

10.  தூளியில் போட்டு வளர வைக்க கூடிய குழந்தைகளுக்கு முதுகில் வலி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.