வைரஸ் தொற்று.. குப்புற படுக்க வைத்தல்.. விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு..

643

வைரஸ் தொற்று உலகம் முழவதும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றியுள்ளது. இதன்காரணமாக, பலரும் அன்றாட வாழ்க்கையையும் நடத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, இந்த நோய் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், வென்டிலேட்டரில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் உள்ள பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சி முடிவு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கிறபோது, அது அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும் என்றும், அவ்வாறு செய்வதால், அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம் என்றும் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of