நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது வெற்றி..! மகிழ்ச்சியில் விஞ்ஞானிகள்..!

26310

எண்ணிடலங்கா நட்சத்திரங்களையும், எண்ணிலடங்கா சூரிய குடும்பங்களையும் இந்த பேரண்டம் கொண்டுள்ளது. இதில் எந்த மூலையிலாவது, பூமியை போன்று வேறு கிரகங்கள் உள்ளதா என விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடிக் கொண்டு தான் உள்ளனர்.

நாம் இந்த பூமியை எப்போதோ ஒரு நாள் அளித்துவிடுவோம் என்று விஞ்ஞானிகளுக்கே தெரிந்திருக்கும் போல. அதற்காகவோ என்னவோ இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாகவே உழைத்து வந்தனர்.

இந்நிலையில் விஞ்ஞானிகளின் உழைப்பு வீண் போகாமல் அதற்கான ரிசல்ட் கிடைத்துவிட்டது. ஆம் பூமியை போன்றே இன்னொரு கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக உயிரினங்கள் வசிப்பதற்கு முக்கியமான தேவை காற்றும், நீரும் தான். பெரும்பாலான கோள்களில் வளிமண்டல அடுக்கு இருந்ததே தவிர நீராவி இல்லை.

ஆனால் இந்த கோளில் நீராவியும், வளிமண்டலமும் நிறைந்திருக்கிறது. இதனால் இந்த கோளில் மனிதர்கள் வசிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்த கோளுக்கு, கே 2 – 18பி என்ற பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

ஆனால் இதில் ஒரு கெட்ட செய்தி என்னவென்றால், அந்த கோள்களுக்கு செல்லும் அளவிற்கு, இன்னும் தொழில்நுட்பம் இல்லை என்பதே. ஆம், அந்த கோளை அடைய 100 ஒளி ஆண்டுகள் ஆகும். ஓளி ஆண்டு என்பது, ஒரு ஆண்டு முழுவதும் ஒளி பயணிக்கும் தொலைவு ஆகும். அதாவது ஒரு ஒளி ஆண்டு என்றால், 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர்.

அப்ப 100 ஒளி ஆண்டுக்கு எத்தனை கிலோ மீட்டர்னு கணக்கு போட்டு பாருங்க. தலையே சுத்துதுல. அதனால் தான் அந்த கோளுக்கு நம்ம போகமுடியாது சூழ்நிலையில இருக்கோம். கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே என்று சொல்வதைப்போல இருக்குல இந்த கதை..,

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Ashanmugam Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Ashanmugam
Guest

இஸ்ரோவின் அயராது உழைப்பும், விடாமுயற்சியும் வீண் போகாது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இந்திய மக்கள் அனைவரும் இஸ்ரோவின் விஞ்ஞானிகளை மனதார பாராட்டி பெருமிதம் கொள்வோம். வாழ்க பாரதம்; வளர்க இஸ்ரோவின் சாதனை.