இனி அனைவருக்கும் இலவச நாப்கின்..! உலகின் முதல் நாடு..!

37010

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களின் வலியை உணர்ந்த ஸ்காட்லாந்து அரசு, அதிரடி மசோத ஒன்றை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

அதாவது, இனிமேல் நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில், சானிடரி நாப்கின்கள் இலவசமாக கிடைக்கும் என்று அந்நாட்டு அரசு மசோதா இயற்றியுள்ளது.

இந்த மசோதாவை முன்மொழிந்த தொழிலாளர் துறை அமைச்சர் மோனிகா, அடுத்த சானிடைசர் நாப்கின்கள் பற்றி இனி எந்த பெண்களும் கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

இதேபோன்று, சானிடரி நாப்கின்களை பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement