பட்டுக்கோட்டையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடத்தை சீர் செய்த SDPI கட்சியினர்

325

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பட்டுக்கோட்டையில் உருக்குலைந்து கிடந்த பகுதிகளை SDPI கட்சியின் நெல்லை மாவட்ட பேரிடர் மீட்பு குழுவினர் சீர் செய்தனர்.

கஜா புயலால் சின்னாபின்னமான டெல்டா மாவட்டங்களில், அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். இதனிடையே புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி தொண்டர்களுக்கு SDPI கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி புயல் பாதித்த பகுதிகளில் SDPI கட்சி தொண்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் SDPI கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோட்டூர் பீர்மஸ்தான் தலைமையிலான பேரிடர் பயிற்சி பெற்ற மீட்பு குழுவினர் பட்டுக்கோட்டையில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பட்டுக்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் புயலால் சாய்ந்து கிடந்த மரங்களை, மரம் அறுக்கும் இயந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of