CAA-க்கு எதிராக SDPI கட்சி சார்பில் பிரம்மாண்ட பேரணி..!

387

CAA, NRC, NPR-க்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. தலைமையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், CAA, NRC, NPR ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. தலைமையில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சிகள் சென்னையில் பேரணி நடத்தினர். அவர்கள், சென்னை ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, CAA, NRC, NPR-க்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், தேசியக்கொடியை ஏந்தியவாறும் சென்ற அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of