நாம் தமிழர் கட்சியை `பீட்’ செய்த SDPI.. உள்ளாட்சி தேர்தலில் கனிசமான வெற்றி..!

1554

நாம் தமிழர் கட்சியை விட SDPI கட்சி மக்களிடையே இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக அங்கிகாரத்தை பெற்றுள்ளது. ஏறத்தாழ 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக SDPI கட்சி அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி,  ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் அதிகமாக ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் என அனைத்து பதவிகளுக்கும் வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் போட்டியின்றி 12 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளனர்.

வாக்குஎண்ணிக்கை முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வெற்றி 1 ஒன்றிய கவுன்சிலர் மட்டுமே. இது அல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 6 பேரும், 103 வார்டு உறுப்பினர்களும் நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றி பெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை)

ஆனால் குறைவான இடங்களில் போட்டியிட்ட SDPI கட்சி, நாம் தமிழர் கட்சியை முந்தும் வகையில்  இந்த உள்ளாட்சி  தேர்தலில் கோலோச்சியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி
103 ஊராட்சி வார்டுகள்,3 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்,3 ஊராட்சி மன்ற தலைவர்கள் மொத்தம் 109 இடங்களில் SDPI வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.