”கொத்துக்கொத்தாக இறந்த சீல்கள்” – விலங்கியல் ஆர்வலர்கள் அதிர்ச்சி

531

நமீபியா கடற்கரைகளில் சீல்கள் கொத்துக்கொத்தாக இறந்து கிடப்பது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் வெல்விஸ் வளைகுடா நகரின் அருகே பெலிகன் பாயின்ட் கடற்கரைகளில் செப்டம்பர் மாதம் சில சீல்கள் இறந்து கிடந்தது முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் சீல்கள் இறந்துள்ளன.

7 ஆயிரம் சீல்கள் வரை இறந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீல்கள் கொத்துக் கொத்தாக இறப்பது விலங்கியல் ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement