நீல நிறமாக காட்சியளித்த அலைகள் – திடீரென குவிந்த பொதுமக்கள்

316

சென்னையில் இரவில் கடல் அலைகள் நீல நிறத்தில் ஜொலித்ததாக பரவிய தகவலால், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவான்மியூர், நீலாங்கரை, பாலவக்கம், கொட்டிவாக்கம், ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கடல் அலைகள் நீல நிறத்தில் காணப்பட்டதாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனால் நகரின் பல்வேறு பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள், கடல் அலைகள் நிறம் மாறியுள்ளதை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், தங்களது செல்போன் மற்றும் கேமராக்களிலும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்த சம்பத்தால் சென்னை நகரின் கடற்கரை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இதுஒரு வகையான கடல்பாசி என்றும் இதன் பெயர் ஜல்லி எனவும் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of