உலகிலேயே ஹெச்.ஐ.வி வைரஸ் குணமான 2வது நபர்…

446

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த இந்நபரை ‘தி லண்டன் பேசண்ட்’ என அழக்கின்றனர். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது.இதனையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்தவருக்கு 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோய் அறிகுறி இல்லையென்றாலும் எய்ட்ஸ் முற்றிலுமாக இந்த நபரைவிட்டு நீங்கியதா என்பதை சில காலம் கழித்துத் தான் அறிய முடியும் என்கிறார் பேராசிரியரும் ஆய்வாளருமான ரவீந்திர குப்தா.
தற்போதைய மருத்துவ அறிவியல் சூழலில் இவர் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும். தற்போதைய மருத்துவ அறிவியல் சூழலில் இவர் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of