சட்ட சபையில் கிரிக்கெட்! மைதானத்திற்கு வெளியே நின்னு பந்து வீசாதிங்க ஸ்டாலின்!!

317

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நேற்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, முதல்வர் ஹாட்ரிக் சிக்சர் அடிப்பார் என்று நகைச்சுவையாக பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று பேரவை தொடங்கிய போது, செம்மலை பேசியதை குறிப்பிட்டு பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வீசும் பந்தில் அதிமுக கிளீன் போல்ட் ஆகும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ஸ்டாலின் வீசும் பந்து நிச்சயம் நோ பாலாக தான் இருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி, மைதானத்திற்குள் வந்து வீசப்படும் பந்து தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், எதிர்கட்சி தலைவர் இன்னும் மைதானத்திற்கு உள்ளே வராமல் பந்தை வீசிக்கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.

இதனால் பேரவையில் சிறிது நேரம் சிரிப்பொலி ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of