555 புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தர் முதல்வர் பழனிசாமி

813

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று (07.01.2019) தலைமைச் செயலகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 140 ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசத்து துவக்கி வைத்தார்.Edappadi-palaniswami

இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்Palaniswamy

பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை – மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 56 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 82 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 122 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 140 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 102 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 63 பேருந்துகளும் என மொத்தம் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 555 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of