டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

159

சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் செங்கோட்டையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவம், துணை ராணுவம், தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் மற்றும் சிறப்பு ஆயுத படைப்பிரிவு (ஸ்வாட்) கமாண்டோக்கள் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு படையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கண்டறிய மோப்ப நாய் பிரிவு களத்தில் இறக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து விழா நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆளில்லா விமானங்கள், சிறிய உளவு விமானங்கள், ராட்சத பலூன்கள், போன்றவற்றை பறக்க விடுவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செங்கோட்டைக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தலைநகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of