10 நாட்களிலேயே காலியா..? – சீமான் பளார் கேள்வி

1664

தனிப்பெரும் முதலாளிகளுக்கு நாட்டின் பொருளாதாரத்தைத் தாரைவார்த்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா..? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம், நல்ல ஆட்சியாளனை அழிவு காலத்தில் அறியலாம் என்ற சேகுவாராவின் வார்த்தைகளை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கொரோனா அழிவு காலக்கட்டத்தில் நமது ஆட்சியாளர்களின் செயல்பாடுகள், அவர்களின் உண்மையான திறனைக் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு தொடங்கி 10 நாட்களிலேயே நாட்டின் நிதியாதாரம் காலியாகிவிட்டதென்றால், அந்தநிலையில்தான் நாட்டின் பொருளாதாரம் இருக்கிறதா..? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement