விவசாயி இல்லாத நாடு சுடுகாடு! சீமான் ஆவேசம்!

742

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் மண்டித்தெருவில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்க்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியா விற்பனைக்கு என்றும், அதில் யார் முதலில் கல்லா பார்பது என்பதில் தான் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்திக்கும் போட்டி என்று கூறினார்.

நீட் தேர்வை முதலில் காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்ததாகவும், பா.ஜ.க அதனை கட்டாயமாக நடைமுறைப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவை மோடி, ராகுல்காந்தி மட்டும் தான் ஆள வேண்டுமா? மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீமான் ஆளக்கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

விவசாயி இல்லாத நாடு சுடுகாடு என்று தெரிவித்த சீமான், விவசாயி வாழ்ந்தால் தான் இலை, பூ, பழம் எல்லாம் காய்க்கும் என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of