“முஸ்லீம்களுக்கு குரல் கொடுப்பீங்களா..” சீமான் கேட்ட தரமான 5 கேள்வி..! ரஜினி பதில் என்ன..?

1025

குடியுரிமை திட்டத்திற்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் சி.ஏ.ஏ குறித்து கருத்து தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்திருநர்.

இந்நிலையில் ரஜினியின் இந்த பேட்டி குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா..?

ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப் பயங்கரவாதிகள் மூலம் எரித்துக் கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா? உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் முன்வைத்தார். இந்த கேள்விகளுக்கு ரஜினியின் ஏழாம் அறிவு என்ன பதிலை கூறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement