காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை… – சீமான் மீண்டும் ஆவேசம்

629

நாங்குநேரி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பாளை ஒன்றிய பகுதிகளில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது.., தாலிக்கு தங்கம் வழங்குவது சாதனை தான் என்றும், அதேபோன்று மதுபானத்தை விற்று தாலியை பறிப்பதும் அரசின் சாதனை தான் என்றும் விமர்சித்தார்.

கூடங்குளம் அணுஉலை, ஸ்டெர்லைட் ஆலைகளை திறந்து வைத்தவர்கள் யார் என்று கேள்வி எழுப்பிய அவர், நமது குழந்தைகளால் விரும்பிய கல்வியை கூட படிக்க முடியவில்லை என வேதனை தெரிவித்தார்.

மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் வரை செல்லூர் ராஜு போன்றவர்கள்தான் அமைச்சர்களாக வருவார்கள் என்றும் காமராஜர் போன்ற முதலமைச்சரை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறினார்.

Advertisement