ஆழ்துளைக்கிணற்றில் சிக்கிக்கொண்டுள்ள குழந்தை..! சீமான் கேட்ட தரமான கேள்வி..!

1925

அறம் திரைப்படத்தில், ஒரு குழந்தையின் ஆழ்துளைக்கிணற்றின் மூடப்படாத குழியினுள் சிக்கி;க்கொள்ளும். அந்த குழந்தையை எப்படி மீட்பது என்பதே, படத்தின் கதையாக இருக்கும். இதேபோன்ற சம்பவம் ஒன்று, தற்போது திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் கடந்த 5 வருடமாக மூடப்படாமல் ஒரு ஆழ்துளைக்;கிணறு இருந்துள்ளது. இந்த கிணற்றின் அருகே சென்ற 2 வயது குழந்தை ஒன்று, தவறி விழுந்துள்ளது.

அந்தக் குழந்தையை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்த குழந்தையை மீட்க முடியவில்லை. 30-அடி ஆழத்தில் இருந்த குழந்தை, மீட்பு பணியின்போது ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக 70-அடிக்குள் கீழே இறங்கியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விண்வெளிக்குச் செயற்கைக்கோள்களை அனுப்பி நம் நாடு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிற செய்திகேட்டு பெருமைப்படுகிற அதே காலக்கட்டத்தில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், ஆழ்துளைக்கிணற்றில் சிக்குண்டு இருக்கும் குழந்தை சுர்ஜித்தை பாதுகாப்பாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன் என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of