234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி – சீமான்

641

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் கலந்தாய்வு கூட்டம், தஞ்சையில் நடைபெற்றது.

அதில், கலந்துக் கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, நாம் தமிழர் கட்சி தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் கட்சி மட்டுமே என்றும் சீமான் கூறினார்.

Advertisement