ஏழைகளை மறைப்பதற்கு சுவர் கட்டிய கல்லில் வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம் – சீமான் பளார்

391

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில், சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றுகூடல்-2020 என்ற நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், ஏழைகளை மறைப்பதற்கு சுவர் கட்டிய கல்லில், வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே என்றும், இப்படிப்பட்ட ஆட்சியாளர்களை வலராற்றில் எந்த நாடும் பெற்றிருக்காது என்றும் கடுமையாக சாடினார்.

மேலும், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசிய சீமான், உங்களை அதிகாரத்தில் உட்கார வைத்தது, நாங்கள் குடிமக்களா இல்லையா என சோதிக்க அல்ல என்றும், நாட்டின் குடிமக்களா இல்லையா என தெரியாமல்தான் எங்கள் வாக்குகளை பெற்றீர்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதேபோல் அரபு இஸ்லாமிய நாடுகளில் வாழும் இந்தியர்களை இந்துக்கள் என அந்த நாடுகள் அனுப்பிவைத்தால் வருபவர்களுக்கு இடம் தந்து, வேலைவாய்ப்பு தந்து வாழவைக்க நாடு தயாராக இருக்கிறதா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.