மனைவியை கைவிட்டு முத்தலாக் மசோதாவை அமல்படுத்துவது தான் மோடி அரசு! சீமான் தாக்கு!

488

மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் பாண்டியம்மாளை ஆதரித்து பழங்கநாத்தம் பகுதியில் பிரச்சாரம் செய்த அவர், பா.ஜ.க, காங்கிரஸ் இரண்டுமே ஒரு கொள்கைகளை கொண்ட கட்சிகள் என தெரிவித்தார்.

தாங்கள் ஆட்சி மாற்றத்திற்காக வரவில்லை என்றும், அடிப்படை அமைப்பு மாற்றத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மக்களவை சந்தித்தவர்கள் எம்.பி.யாக இருப்பதாகவும், ஆனால் மக்களை சந்திக்காத நிர்மலா சீதாராமன் அமைச்சராக இருப்பதை தான் எதிர்ப்பதாக கூறினார்.

வேளாண்மையை கைவிட்ட நாடுகள் பிச்சை எடுப்பதாக தெரிவித்த சீமான், உழவர்கள் இல்லையென்றால் உயிர்கள் இல்லை என்று தெரிவித்தார்.

மனைவியை கைவிட்டு முத்தலாக் மசோதாவை அமல்படுத்துவது தான் மோடி அரசு என்றும் அவர் விமர்சனம் செய்தார்.