“அவர் திமுகவின் கூலி..” P.K-வை வம்பிழுக்கும் சீமான்..!

591

சென்னை வேலப்பன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சீமான் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், பிரஷாந்த் கிஷோர் போன்று தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நியமிக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சீமான், உலகையே ஆளுகிற அறிவு தங்களுக்கு இருக்கிறது என்றும், இன்னொருவர் மூளைக்கு தங்களால் வேலை செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், உள்ளத்தூய்மையுடன் மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளோம் என்று கூறிய சீமான், திமுக இதனை செய்திருந்தால் பிரஷாந்த் கிஷோர் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்காது என்று தெரிவித்தார்.

மேலும், தங்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் தான் இன்னொருவரை திமுக கூலிக்கு வைத்துள்ளது என்றும் சீமான் கூறினார்.