ராஜீவ்காந்தி கொலை வழக்கு..! சீமானின் பரபரப்பு குற்றச்சாட்டு..! கொதிக்கும் பாஜக தலைவர்கள்..!

950

ராஜுவ்காந்தி கொலை வழக்கில், 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட வருடங்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் விடுதலைக்காக தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தியை கொன்று விட்டதாக கூறித்தான் இலங்கையில் போர் செய்து லட்சக்கணக்கான மக்களை கொன்றார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் போர் நடத்தியது காங்கிரஸ் அரசுதான் என்று கூறிய அவர், அதற்கு தி.மு.க. உடன் நின்றதை யாராவது மறுக்க முடியுமா என்றும், ஒரு மரணத்துக்காக ஒரு இனத்தின் மரணத்தை சமப்படுத்தி நிறுத்தி உள்ளனர் என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழனின் பாரம்பரிய உடையை பிரதமர் அணிந்தது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுக்கு ஒன்று தான் என்றும், கதர் அணிந்த பாஜக மற்றும் காவி அணிந்த காங்கிரஸ் என்றும் அவர் இரண்டு கட்சிகளையும் விமர்சித்துள்ளார். இவரின் இந்த கருத்தை தொடர்ந்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement