சுபஸ்ரீ மரணம், பிரேமலதாவை சாடிய சீமான்

373

சிவந்தி ஆதித்தனாரின் 84 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவில்லத்திற்கு வந்த மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதாகை வைப்பது குற்றம் அல்ல, ஆனால் அதனை முறைப்படுத்த வேண்டும் என கூறினார்.

சுபஸ்ரீ விவகாரத்தில் தமது கட்சிக்காரரை காப்பாற்ற வேண்டும் என்பதுபோலவே ஆளும் கட்சியினர் செயல்படுகின்றனர் என்றும், கூட்டணி கட்சியில் இருப்பதால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் எனவும் தெரிவித்தார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அரசு எதுவுமே முறையாக செய்யாத போது, மாணவர்களும் அப்படி தான் நடந்து கொள்வார்கள் என்றும், தான் மருத்துவராக வேண்டும் என்று தான் மாணவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றும் சீமான கூறினார்.