தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா..! இது முதல்கட்ட வெற்றி..! சீமான் பேட்டி..!

689

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரியகோவிலில் குடமுழுக்கு விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா, தமிழிலும் நடந்துள்ளது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

அதேசமயம் சிவாச்சாரியார்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஓதுவார்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றும் சீமான் கூறினார்.

வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் மந்திரங்கள் ஓதப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா தமிழில் நடைபெற்றது, முதல்கட்ட வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

Advertisement