“தலயா.. தளபதியா..” – அடிச்சிக்கிட்டு சாகத்தான் போறாங்க..! இளைஞர்களை விளாசிய சீமான்..!

725

மீண்டும், மீண்டும் திராவிட கட்சிகளுக்கு வாக்களித்தால் அது இளைய தலைறையினருக்கு செய்யும் துரோகம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கெடார், காணை, மாம்பழப்பட்டு ஆகிய பகுதிகளில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் வட மாநில இளைஞர்கள் அரசு பணியில் சேர்ந்து வருவதாகவும், தமிழக இளைஞர்களோ தலயா? தளபதியா ? என்று சண்டையிட்டு அடித்துக் கொண்டு சாகப்போவதாக தெரிவித்தார்.

இரட்டை இலைக்கும், உதய சூரியனுக்கும் மாறி மாறி வாக்களிப்பது வருங்கால தலைமுறைக்கு செய்யும் துரோகம் என்றார். இந்த நிலை தொடர்ந்தால் அது வரலாற்று பிழையாக மாறிவிடும் என்றும் சீமான் தெரிவித்தார்.

Advertisement