ஓட்டுக்களை பெற போராட்டம் வேண்டாம்! பிக்-பாஸ் போதும்! – சீமான் ஆவேசம்!

682

சென்னை விமான நிலையத்தில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“தமிழ்நாட்டு மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை. தமிழ்நாட்டில் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற போராட்டங்கள் நடத்தத் தேவையில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் என்பதைத்தான், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

ராமர் கோயிலைக் கட்டி விட்டால், பாஜகவால் தொடர்ந்து அரசியல் செய்ய முடியாது. அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில், பாஜக அரசு முடிந்தால் ராமர் கோவிலை, கட்டிக் காட்டட்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of