எனக்கு ஒட்டுப் போட்டா போடுங்க! இல்லாவிட்டால் போங்க! சீமான் ஆவேசம்!

722

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர், தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான், அவரது கட்சி தொண்டர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், வீரப்பன் சத்திரத்தில் நாம் தமிழர் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது பின்வருமாறு:-

“இதுவரைக்கும் எத்தனையோ தேர்தலை நாம் பார்த்தாச்சு.. ஆனா எந்த மாற்றத்தையும் பார்க்கலை. திமுகவுக்கு மாற்று அதிமுக, அதிமுகவுக்கு மாற்று திமுக, பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ், காங்கிரசுக்கு மாற்று பாஜக. இப்படியேதான் போகுது. இதிலிருந்து ஒரு மாற்று ஏற்படதான் ‘நாம் தமிழர்’ என ஏற்படுத்தி இருக்கோம்.

ஆட்சியாளர்கள் கொடுக்கிற பணம் வறுமையை போக்கிடுமா? அந்த பக்கம் பொங்கலுக்கு ரேசனில் 1000 ரூபாய் தர்றாங்க.. அதை இந்த பக்கம் டாஸ்மாக் கடையில் வாங்கிக்கிறாங்க. இப்ப அரசியல்வாதிகள் எல்லாம் தங்கள் வாரிசுகளை நட்டு வைக்கிறார்கள்.

அவங்கள பார்த்து நான் கேட்கிறேன்.. தமிழகம் என்ன உங்கள் குடும்ப சொத்தா? எங்கள் பாட்டன்.. முப்பாட்டான் எல்லாம் உங்களிடம் இதையா கேட்டாங்க? 50 வருஷமாக எதுவும் செய்யாத காங்கிரஸ் வர்ற போற 5 வருஷத்துல என்ன செய்ய போகுது? போன 5 வருஷமாக எதுவும் செய்யாத மோடி திரும்பவும் பிரதமர் ஆயிட்டா மட்டும் என்ன செய்ய போகிறார்? வரும் 5 ஆண்டுகளில் இந்த நாடே இருக்காது.. முடிச்சிடுவார்.

நான் உங்களிடம் ஓட்டு கேட்க போவதில்லை. எனக்கு ஓட்டுப்போட்டால் போடுங்கள்.. இல்லாவிட்டால் போங்கள்.. ஆனால் நாட்டுக்காக போராட வேண்டியது எனது கடமை”

என்றார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of