முதல்முறையாக பழனிசாமியை ஆதரித்த சீமான்..! அதுவும் இந்த விஷயத்துக்கு தான்..!

947

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான். இவர் தலைமையிலான இந்த கட்சி, தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அணைத்திற்கும் இவர் மேடைகளில் பேசும் பேச்சும் ஒரு காரணம்.

இவரது பேச்சைக் காணவே பல்வேறு தரப்பினர் சீமானுக்கு ரசிகர்களாக உள்ளனர். எப்போதும் ஆளும் கட்சியை தாக்கியே பேசும் சீமான், தற்போது முதலமைச்சருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-

“ஆடை என்பது அவரவர்களின் தனி மனித உரிமை. முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு செல்கிறார். அது ஒரு குளிர் பகுதி. அதற்கேற்ப உடையணிகிறார்.

ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதலமைச்சர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும்.

பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் எங்களுக்கு பெருமையாக இருந்தது.”

இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement