சீமானின் இந்த கருத்து வரவேற்கத்தக்கதல்ல | Premalatha Vijayakanth

289

நேற்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று தெரிவித்தார்.

பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் மக்களின் வரவேற்பு நன்றாக இருக்கிறது. இடைத்தேர்தலுக்கான பிரசாரமாக இருக்கவேண்டும். ஆனால் கடந்த கால வரலாற்றை எடுத்துக்கொண்டு இடைத்தேர்தலில் பேசி இடைஞ்சலை ஏற்படுத்தி பேசுவதை சீமான் தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறினார்.

ராஜீவ்காந்தி தமிழக மண்ணில் இறந்து உள்ளார். அந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி மரணம் துரதிர்ஷ்டவசமானது என்றும், சீமானின் கருத்து வரவேற்கத்தக்கதல்ல. ஆனால் சீமான் கட்சியை தடை செய்யவேண்டும் என்றால் மற்ற கட்சிகளையும் தடை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.