என் உயிருக்கு ஆபத்து.. சீனுராமசாமி கொடுத்த அதிர்ச்சி..

1114

கிராமத்து கதையம்சம் கொண்ட திரைப்படங்களை எடுக்கும் ஒரு சில இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குநர் சீனு ராமசாமி. இதுவரை, கூடல் நகர், நீர் பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி அதிர்ச்சிகர டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தனது உயிருக்கு ஆபத்து என்றும், முதல்வரின் உதவி வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் அந்த டுவீட் பற்றி விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது, 800 படத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதற்காக, எனக்கு பலரும் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டுகின்றனர். மிரட்டல்கள் தொடர்பாக, போலீசிடம் விரிவாக புகார் அளிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

Advertisement