தடுப்பூசி பரிசோதனை இந்தியாவில் நிறுத்தம்..! அதிர்ச்சி காரணம்..!

788

சீனாவில் உருவான வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வரும் நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில் தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சி செய்தது.

இந்த மருந்துக்கான சோதனை முயற்சி சீரம் என்ற நிறுவனம் சார்பில் இந்தியாவிலும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசி சோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து சிலருக்கு, பக்க விளைவுகளை ஏற்படுத்தியதையடுத்து, சோதனையை நிறுத்தியுள்ளனர். இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement