சுயேட்சை வேட்பாளரின் சொத்து “ரூ 1.76 லட்சம் கோடி”! அதிர்ந்து போன தேர்தல் ஆணையம்!

917

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தமிழகத்தின் முக்கிய கட்சியின் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து முடித்து விட்டனர். இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வேட்பு மனுவில், தமது கையிருப்பு ரொக்கப்பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது கடனாக உலக வங்கித் தந்திருக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.