முதல் முறையாக உயிரைக் காப்பாற்றிய செல்பி! ஒரு சுவாரஸ்ய சம்பவம்!

985

கேரளா மாநிலத்தின் சங்கனாச்சேரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது மனைவியுடன் சண்டைப் போட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். வாழ்க்கையை வெறுத்துப்போன அந்த வாலிபர், ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என நினைத்து சங்கனாச்சேரி ரெயில்வே கேட் அருகே வந்துள்ளார்.

யாரும் இல்லாத நேரமாக வந்த அவர், நேராக தண்டவாளத்திற்கு வந்து படுத்துக் கொண்டார். பின்னர் தன்னை அப்படியே செல்பி எடுத்துக் கொண்டு, ‘வெறுப்பாக இருக்கிறது நண்பர்களே.

போதும் வாழ்ந்தது. அதனால், தற்கொலை செய்யப்போகிறேன்’ எனக் கூறி வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியாக புகைப்படத்துடன் அனுப்பி விட்டு படுத்துக் கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடனடியாக களத்தில் இறங்கிய அவர்கள், அவர் எங்கு படுத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க வேண்டி, பல குரூப்களுக்கு அந்த செல்பியை அனுப்பியுள்ளனர். இறுதியில் 82 எனும் எண்ணுடன் ஒரு மைல் கல், அந்த போட்டோவில் இருந்ததை வைத்து அவரது நண்பர்கள், அந்த நபரை காப்பாற்றியுள்ளனர்.

செல்பியால் பல உயிர்கள் பறிபோகியிருந்த நிலையில், ஒரு செல்பி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

Advertisement