ஆக்டோபஸுடன் செல்ஃபி…! – பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி..!

757

அமெரிக்காவில் ஆக்டோபஸுடன் வினோத புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு, பெண் விபரீதத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.

வாஷிங்டன் நகரை சேர்ந்த ஜேமீ பிஸ்செக்லியா என்ற பெண், கடந்த வாரம் டக்கோமோ நேரோஸ் பாலத்தின் அருகே மீன்பிடிக்க சென்றார்.

அங்கு மீனவர் வலையில் ஆக்டோபஸ் ஒன்று சிக்கியதை பார்த்த ஜேமீ, ஆக்டோபஸுடன் புகைப்படம் எடுத்து டெர்பே எனும் புகைப்பட போட்டியில் கலந்து கொள்ள ஆசைப்பட்டார்.

அதன்படி, ஆக்டோபஸை தனது வாய் அருகே வைத்த அவர், இரு கைகளையும் விரித்தபடி புன்சிரிப்புடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஆக்டோபஸ் திடீரென தாக்கியதால் கன்னம் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு பின், ஜேமீயின் இடது பக்க முகம், தொண்டை பகுதி மற்றும் சுரபிகள் செயலிழந்தது போல் வீங்கி இருந்தன. மேலும் கன்னம் பகுதியில் அரிப்பும் ஏற்பட்டது.

இதனால் கடும் அவதிக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் அவர், இதுபோன்ற விஷப்பரீட்சையில் யாரும் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of