“பஞ்சப் பரட்டையாக..” மனு கொடுக்க வந்த பொதுமக்கள்..! இழிவுப்படுத்திய அமைச்சர் செல்லூர் ராஜூ..!

2513

மதுரையில் மனு கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இழிவுப்படுத்தும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் பகுதியில் முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பொதுமக்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, பஞ்சப் பரட்டையாக தலைக்கு எண்ணெய் கூட தேய்க்காமல் மனு கொடுக்க வந்துள்ள மக்களை பார்க்கும் போது பாவமாக இருப்பதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of