நாளை தனுஷ் ரசிகர்களுக்கு வெறித்தனம் தான்.. செல்வராகவன் பட முக்கிய அப்டேட்..!

587

நடிகர் தனுஷ், இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் இணைந்து, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இந்த கூட்டணி, மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஷீட்டிங் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 7.10 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படத்தையடுத்து, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்திற்காக மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement