“இந்த கேள்விக்கு அவர் பதிலளிப்பார்..” நைசாக நழுவிய செங்கோட்டையன்

2086

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங் காட்டுபாளையத்தில், துணை சுகாதார நிலையத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்த்தித்த அவர், நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பதிவு செய்திருந்த நிலையில் இன்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு முழுமையான பயிற்சி அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கே அரசு வேலை என்ற பாமக நிறுவனர் ராமதாஸின் கோரிக்கைக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளிப்பார் என்று நைசாக நழுவிக்கொண்டார்.

Advertisement