நீண்ட நாள் கோரிக்கை..! செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவு..!

581

தமிழக தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழக அரசின் அணைத்து துறைகளும் உள்ளது என்றும், வளர்ச்சிப்பணிகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், நவீன தொழில்நுட்பங்களை கொண்டு, மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் எடுக்கும் புதிய திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறோம் என்று கூறிய அவர், தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருவதாக பெருமிதம் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இதன்மூலம் பாரம்பரிய வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of