10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..? – செங்கோட்டையன்

772

பள்ளிகள் திறப்பு குறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகம் முழுதும் 30 லட்சம் மாணவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் விநியோகிப்பதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

ஒவ்வொருமாவட்டத்திலும் இணைஇயக்குநர் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து சட்டமன்றத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Advertisement