அரசு பேருந்தின் டயர் வெடித்ததில், இரண்டு பயணிகளுக்கு காலில் பலத்த காயம்

835

சென்னையில் அரசு பேருந்தின் டயர் வெடித்ததில், இரண்டு பயணிகளின் காலில் முறிவு ஏற்பட்டது.

தரமற்ற பேருந்துகளால் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாக உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து பாரிமுனைக்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 57 என்ற மாநகரப் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது.

இதில் பேருந்தின் மேடை பகுதி உடைந்து சிதறியதில், இரண்டு பயணிகளின் கால்கள் பலத்த சேதம் அடைந்தன.

இதையடுத்து இருவரும் உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தரமற்ற பேருந்துகளால் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாக உள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் தருமபுரியில் அரசு பேருந்தின் டயர் வெடித்ததில் 10க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement