மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிச்சாமி

151

மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 3ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் கலைஞர்கள் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கலைமாமணி விருதுக்கு வழங்கப்படும் 3 சவரன் தங்கப்பதக்கத்திற்கு பதில், இனி 5 சவரன் பதக்கம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் 3 பேருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்றும், நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2ஆயிரம் ரூபாயில் இருந்து 3ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.